வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியது ஒபாமா குடும்பம்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 45வது அதிபராக இன்று பதவியேற்றார். துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்பு விழா வாஷிங்டனின் கேப்பிட்டல் ஹில் பகுதியில் நடைபெற்றது. அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட், ட்ரம்ப்புக்கு அதிபராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பதவிகாலம் முடிவடைந்த அதிபர் ஒபாமா அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோரும் பங்கேற்றனர். முன்னதாக அதிபருக்கான வெள்ளை மாளிகையில் இருந்து ஒபாமா குடும்பம் வெளியேறியது.
நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, ராணுவ ஹெலிகாப்டர் மூலம், மனைவி மிச்சேலுடன், மேரிலேண்ட் பகுதிக்கு சென்றடைந்தார் ஒபாமா. அவர்களை அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவியா ஃபர்ட்ஸ் லேடி, மெலினா ட்ரம்ப் ஆகியோர் கை குலுக்கி, வழியனுப்பி வைத்தனர்.
அதிகாரிகள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் மேரிலேண்ட் பகுதியில் கலந்துரையாடிய ஒபாமா, பிறகு தனது மனைவியுடன், கலிபோர்னியாவுக்கு விடுமுறையை கழிக்க செல்கிறார். பிறகு தம்பதிகள் வாஷிங்டன் திரும்புகிறார்கள். ஒபாமாவின் இளைய மகள் ஷாஷா பள்ளி படிப்பை படித்து முடிக்கும்வரை வாஷிங்டன்னிலேயே தங்கியிருக்க ஒபாமா குடும்பம் முடிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.