குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு
குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை(ஜன., 26) கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் சுமார் 1.12 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், வழிப்பாட்டு தளங்கள் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் முக்கிய சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகளில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். பிரச்னைக்குரிய பகுதிகள் என கண்டறியப்பட்ட இடங்களில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குடியரசு தின விழா நடைபெறும் மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நன்றி : தினமலர்