Breaking News
பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். இதனை வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதி படுத்தின.

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற நான்காவது நாளான நேற்று(ஜன., 24) இரவு இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க நேரப்படி பிற்பகல் 1 மணியளவில், இந்திய நேரப்படி இரவு 11.30 மணியளவில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச இருப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசியதாக நேற்று இரவு வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு இதுவரை நான்கு வெளிநாட்டு தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ள டிரம்ப் 5-வது வெளிநாட்டு தலைவராக மோடியுடன் பேசினார்.

பதவியேற்ற மறுநாள் (ஜனவரி 21) கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்யூ மற்றும் மெக்ஸிகன் அதிபர் பெனா நீட்டோவுடன் தொலைபேசியில் பேசினார். ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி-யை டிரம்பு தொடர்பு கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.