Breaking News
தமிழனுக்குக் கொம்பு முளைத்துவிட்டது : வைரமுத்து கவிதை


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக இளைஞர்கள் ஏற்படுத்திய எழுச்சி போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது. மாணவர்களின் இந்த எழுச்சி போராட்டத்தை உலகமே பார்த்து வியந்தது. இந்நிலையில் தமிழர்களின் இந்த எழுச்சிக்கு கவிஞர் வைரமுத்து தன் கவிதை நடையில் கவுரவித்திருக்கிறார். அவரின் கவிதை இதோ…வாடிவாசல் திறந்துவிடும்வாழ்த்துகிறேன் தம்பி – இனிகோடிவாசல் திறக்கும்உன்கொள்கைகளை நம்பிதலைவர்களே இல்லாதகட்சியொன்று காட்டி – ஒருதலைமுறைக்கே வழிசொன்னீர்தமிழினத்தைக் கூட்டிஅடையாளம் தொன்மங்கள்அழிக்குமொரு கூட்டம் – உங்கள்படையாழம் பார்த்தவுடன்பயந்தெடுத்த தோட்டம்பீசாவும் பெப்சியுமேஇளைஞர்கள் என்று – வாய்கூசாமல் சொன்னவரைக்கொன்றுவிட்டீர் கொன்றுசொல்வாங்கி எல்லாரும்சூளுரைத்த பாட்டு – கடல்உள்வாங்கிப் போனதடாஉங்கள்குரல் கேட்டுஒருகொம்பு ஆணென்றால்மறுகொம்பு பெண்தான் – அந்தஇருகொம்பின் மத்தியிலேஇடுங்கியது மண்தான்தண்பனியால் சுடுகதிரால்தமிழினமா சாகும்? – அடதண்ணீரில் வீழ்வதனால்வெயில்நனைந்தா போகும்?தெருவிருந்து போராடத்திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்கருவிருந்து பெற்றாரின்கால்களுக்கும் வணக்கம்சதுராடிக் களம்கண்டசகோதரிகாள் வணக்கம் – உங்கள்எதிர்காலக் கருப்பைகள்நெருப்பைத்தான் சுமக்கும்காளைகளை மீட்டெடுக்கக்களம்கண்ட கூட்டம் – இனிநாளைகளை மீட்டெடுக்கநாணில்அம்பு பூட்டும்வரம்புகளை யார்விதித்தார்வரட்டுமொரு யுத்தம் – எங்கள்நரம்புகளில் ஓடுதடாராஜ ராஜ ரத்தம்போராடிச் சாதித்துப்புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்சாராயம் குறித்தும்நீர்ஆராய வேண்டும்

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.