விவசாய கடன் 10 லட்சம் கோடியாக வழங்க இலக்கு -அருண் ஜெட்லி
2017- 18 மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இது அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் 4 வது பட்ஜெட்டாகும்.இது ரெயில்வே பட்ஜெட்டுடன் இணைந்த பொது பட்ஜெட்டாகும்.
* கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
* இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்
* ஏழைகளுக்கு வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும் * டிஜிட்டல் பொருளாதாரம் வளர்க்கப்படும்
* வரி வசூல் நேர்மையானதாக இருக்கும்
* வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தை குறைக்கப்படும்
* விவசாயிகளுக்கு 60 நாள் வட்டி தள்ளுபடி
* பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகள் அதிக அளவு கடன் வழங்க முடியும்
* பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13000 கோடி ஒதுக்கீடு
* கடந்த ஆண்டு பயிர் காப்பீடுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5500 கோடியாக இருந்தது
* விவசாய உற்பத்தி வளர்ச்சி இவ்வாண்டில் 4.1 சதவீதமாக இருக்கும்
* 2017-18 ல் விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத சாதனையாக 10 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு
* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம் அதிகரிக்கும்