Breaking News
ஓ.பி.எஸ்., அதிரடி; தலைவர்கள் கருத்து

”முதல்வரை மிரட்டியவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பல்வேறு தலைவர்களும் ஓ.பி.எஸ்.,க்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

நடவடிக்கை தேவை:

அவர் கூறியதாவது: தமிழகத்தில், தற்போது அரசு இல்லை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. முதல்வரை செயல்பட அனுமதிக்கவில்லை. அவரை, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா செயல்படவிடவில்லை. முதல்வரை மிரட்டி, ராஜினாமா செய்ய வைத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீண்டும் ஆட்சி:

முதல்வர் பன்னீர்செல்வம், மீண்டும் ஆட்சி அமைக்கும் பணியில் இறங்க வேண்டும். அவரை மிரட்டியவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையான மற்றும் நிலையான ஆட்சி அமைந்தால், தி.மு.க., எதிர்க்கட்சியாகவே செயல்படும். முதல்வர் பன்னீரின் நல்ல திட்டங்களுக்கு, தி.மு.க., ஆதரவு கொடுக்கும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்: முதல்வரின் இந்த முடிவு வரவேற்க்கதக்கது. முதல்வரை செல்படவிடாமல் சிலர் தடுத்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் முனுசாமி: பன்னீர் செல்வத்தை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்து கையெழுத்து வாங்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசியல் சாசனபடி கவர்னர் ஆட்சியமைக்க வேண்டும். தன்மானத்துடன் பேட்டியளித்துள்ளார் பன்னீர் அவரை நான் வாழ்த்துகிறனே். இவரின் பேட்டி மூலம் சசிகலா தான் பன்னீரை செயல்படவிடாமல் செய்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன்: தற்போதைய நிகழ்வுகளுக்கு அ.தி.மு.க.,வே முழு முதற் காரணம். முதல்வரையே பதவியை விட்டு விலக சொல்லி உள்ளனர். அதிமுக., அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும். உண்மை நிலைக்கு ஏற்றவாறு பதில் வரும் என நம்புகிறேன்.

எச்.ராஜா, பா.ஜ.,: பன்னீர் செல்வம் சிறப்பாக ஆட்சி செய்தார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டி தற்போது ஜனநாயகத்தை கேள்விகுறியாக்கியுள்ளது. இது தனிப்பட்ட நிகழ்வு அல்ல. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். தமிழகத்தை காப்பாற்ற நினைக்கும் ஓ.பி.எஸ்.,க்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.