பன்னீர் செல்வம் பேட்டியின் பின்னணியில் பாஜக உள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேட்டியின் பின்னணியில் பாரதீய ஜனதா இருப்பதாக காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
ஓ பன்னீர் செல்வம் அளித்த பேட்டியால் தமிழக அரசியலில் உச்ச கட்ட அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இந்த நிலையில், பன்னீர் செல்வத்தின் பேட்டியின் பின்னால் பாஜக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் செய்திதொடர்பாளர்களில் ஒருவருமான அபிஷேக் சிங்வி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:- “ பன்னீர் செல்வத்தை கடத்திச்சென்றது யார்? பாஜகதான் என்பது தெளிவாக தெரிகிறது. கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்ற விமானத்தை தமிழகத்தில் இருந்து மராட்டியம் நோக்கி மோடி திசை திருப்பி விட்டார். இது பரட்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நன்றி : தினத்தந்தி