Breaking News
அப்பாவைப் போல மகள் நம்பிக்கையளிக்கிறார்: விவேக் பாராட்டு; சவுந்தர்யா நெகிழ்ச்சி

அப்பாவைப் போல மகள். நம்பிக்கையளிக்கிறார் என்ற விவேக்கின் பாராட்டுக்கு சவுந்தர்யா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ள இப்படத்தை வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணு ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் படமாக்கி வருகிறார்கள். தற்போது தனுஷ் மற்றும் விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறார்கள்.

‘வேலையில்லா பட்டதாரி 2’ படப்பிடிப்பு தளத்திலிருந்து விவேக், “சவுந்தர்யா, சுறுசுறுப்பாகவும், வேகமாகவும், உன்னிப்பாக கவனிப்பவராகவும், விரைந்து முடிவெடுப்பவராகவும் இருக்கிறார்.

அவரது கூர்மையான கண்களை இமைத்துக் கொண்டே கைகளை ஸ்டைலாக கொண்டு செல்கிறார். அப்பாவைப் போல மகள். நம்பிக்கையளிக்கிறார்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இதற்கு பதிலளிக்கும் வகையில் விவேக்கின் ட்விட்டர் தளத்தை குறிப்பிட்டு, “மிக்க நன்றி. உங்களைப் போன்ற மூத்த அனுபவமுள்ள கலைஞர்களிடமிருந்து பாராட்டு வருவது எனக்கு மிகப்பெரிய விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி : தி இந்து தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.