பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை
காதலர் தினம் இன்று (பிப்ரவரி 14) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை பாகிஸ்தானில் கொண்டாடக்கூடாது, தடை விதிக்கவேண்டும் என்று கோரி அப்துல் வாகீத் என்பவர் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், “காதலர் தின கொண்டாட்டம் என்பது இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு எதிரானது. ஆனால் இந்த தினம் குறித்து சமூக ஊடகங்கள் பிரபலப்படுத்தி வருகின்றன. எனவே காதலர் தினத்தை கொண்டாடுவதற்கும், அதுபற்றி செய்திகள் வெளியிடுவதற்கும் தடை விதிக்கவேண்டும்” என்று கூறி இருந்தார். இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து நாடு முழுவதும் காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்து பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் உடனடியாக அறிவிக்கை வெளியிட்டது. சமூக ஊடகங்களும் காதலர் தினம் தொடர்பான செய்திகளை வெளியிடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
நன்றி : தினத்தந்தி