Breaking News
ஜெ. அறையில் இடைப்பாடி பொறுப்பேற்பு

முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த அறைக்கு சென்று, ஜெ., பயன்படுத்திய நாற்காலியில் அமர்ந்து முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இரண்டு முறை வழக்குகளில் சிக்கி முதல்வர் பதவியை இழந்த போது, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக அவரால் நியமிக்கப்பட்டார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஜெயலலிதாவின் அறையை பயன்படுத்தவில்லை. தனது அமைச்சர் அறையில் இருந்தே, முதல்வர் பணிகளை மேற்கொண்டார். ஜெயலலிதா மறைந்து, மூன்றாவது முறையாக பன்னீர்செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்ட போதும், இதே நடைமுறையை தான் பன்னீர்செல்வம் பின்பற்றினார்.

ஆனால், சட்டசபையில் பெரும் சர்ச்சைகளுக்கு இடையே பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, இன்று காலை, 12.30 மணிக்கு தலைமை செயலகம் சென்றார். ஏற்கனவே அமைச்சர் என்ற நிலையில் அவருக்கு ஒரு அறை இருந்தது. ஆனால், அவரோ நேராக ஜெயலலிதா பயன்படுத்திய அறைக்கு சென்றார்.ஜெ., பயன்படுத்திய நாற்காலியில் அமர்ந்து முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின், தலைமை செயலர் கிரிஜா, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.