ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
வாஷிங்டன் : ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய தொலைபேசி ரூ. 1.62 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
ஹிட்லர் தனது தனிப்பட்ட உபயோகத்திற்காக பயன்படுத்தி வந்த தொலைபேசி மூலம் தான் கடைசி 2 ஆண்டுகள் பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். முதலில் கறுப்பு நிறத்தில் இருந்த இந்த தொலைபேசிக்கு, பின்னர் செங்கல் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் பெயர் பொறிக்கப்பட்ட இந்த தொலைபேசி, ஹிட்லரின் மரணத்திற்கு பிறகு, 1945ம் ஆண்டு பதுங்கு குழி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த தொலைபேசி 243,000 அமெரிக்க டாலருக்கு (ரூ.1,62,72,495) ஏலம் எடுக்கப்பட்டது. இந்த தொலைபேசியில் ஸ்வஸ்திக் மற்றும் கழுகு சின்னம் அச்சிடப்பட்டுள்ளது. தொலைபேசி மட்டுமின்றி, ஹிட்லர் பயன்படுத்திய 1000 பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.