Breaking News
65 சதவீத ஐடி பணியாளர்களிடம் புதிய தொழில் நுட்பத்துக்கு மாறும் தகுதி இல்லை: கேப்ஜெமினி தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீனிவாஸ் கண்டுலா தகவல்

தகவல் தொழில்நுட்பத்துறையில், பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு நிறுவனங்கள் மாறி வருகின்றன. இந்தச் சூழலுக்கு ஏற்ப 65 சதவீத பணியாளர் களால் மாற முடியாது என கேப் ஜெமினி இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி னிவாஸ் கண்டுலா கூறியிருக் கிறார்.

சில நாட்களுக்கு முன்பு, நாஸ்காம் லீடர்ஷிப் மாநாட்டில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது.

பெரும்பாலான பணியாளர் களைப் புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப அவர்களின் தகுதியை உயர்த்த முடியாது. இதனால் மத்திய அல்லது மூத்த பிரிவு அதிகாரிகளுக்கு வேலையிழப்பு ஏற்படக்கூடும். நான் எதிர்மறை விஷயத்தை கூற வேண்டும் என்பதற்காக இதனைத் தெரிவிக்க வில்லை. ஆனால் 65 சதவீத பணியாளர்களை ஐடி துறையின் தேவைக்கு ஏற்ப மாற்றுவது கடினம். அதனால் இந்தியாவில் நடுத்தர நிலையில் அதிக வேலை இழப்புகள் இருக்கக் கூடும்.

பெரும்பாலான ஐடி பணியாளர் கள் சுமாரான பொறியியல் கல்லூரிகளில் இருந்து வந்தவர்கள். அங்கு அவர்களுக்கு கடுமையான பயிற்சி ஏதும் அளிக்கப்படவில்லை என்று கூறினார். முன்னதாக மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப சுமார் 15 லட்சம் பணியாளார்களுக்கு மறுபயிற்சி அவசியம் என இந்திய ஐடி நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் கூறியிருந்தது. ஆனால் இதற்கு பதில் அளித்த னிவாஸ், வருமானத்தை அடிப்படையாக கருதும் முதலீட்டாளர்கள், பணி யாளர்களின் பயிற்சிக்காக அதிகம் செலவிட மாட்டார்கள்.

தகவல் தொழில்நுட்பம் அறிவு சார்ந்த துறையாகும். ஆனால் பெரும்பாலான பணியாளர்கள் சுமாரான கல்லூரியில் இருந்து பணிக்கு எடுக்கப்படுகிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த பட்ச சம்பளம் ஆண்டொன்றுக்கு சராசரியாக ரூ.2.5 லட்சமாக இருந் தது. இப்போது ரூ.3.5 லட்சமாக இருக்கிறது. பணவீக்கத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் பெரிய ஏற்றம் இல்லை. தரமான பணியாளர்கள் இல்லாததால் தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ள வைப்பதே பெரிய சவாலாக இருக்கிறது.

தற்போது பணிக்கு வரும் மாணவர்கள் கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூட கூறமுடி யாமல் இருக்கின்றனர். அந்த செமஸ்டரில் படித்த விஷயங்களை கூட அவர்களால் சொல்ல முடிய வில்லை என்று கூறினார்.

பொறியியல் பட்டதாரிகளில் 80 சதவீதத்தினர் பணிக்குத் தகுதி யானவர்கள் இல்லை என் ஆய் வில் தெரிய வந்திருக்கிறது. பிரான்ஸை சேர்ந்த கேப்ஜெமினி நிறுவனத்தின் இந்திய பிரிவில் ஒரு லட்சத்துக்கு மேலான பணி யாளர்கள் உள்ளனர்.

நன்றி : தி இந்து தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.