Breaking News
‘சாமி 2’ அப்டேட்: மீண்டும் விக்ரம் – த்ரிஷா ஜோடி

‘சாமி 2’ படத்தில் விக்ரமுக்கு நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘இருமுகன்’ படத்தைத் தொடர்ந்து ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் விஜய் சந்தர் இயக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். இதில் விஜய் சந்தர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

அவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சாமி 2’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விக்ரம். ‘இருமுகன்’ படத்தின் தயாரிப்பாளரான ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.

‘சாமி 2’ படத்துக்கு திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் தீவிரமாகவுள்ளார் ஹரி. முதல் பாகத்தில் நாயகியாக நடித்த த்ரிஷா, இதிலும் நாயகியாக நடிப்பாரா என்ற கேள்வி நிலவி வந்தது.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “3வது முறையாக மீண்டும் விக்ரம் மற்றும் ஹரி இருவரோடு இணைந்து பணியாற்றவுள்ளேன். ‘சாமி 2’வில் ஒப்பந்தமாகியுள்ளேன்” என்று த்ரிஷா தெரிவித்துள்ளார்.

மே முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. விக்ரம் – த்ரிஷா இருவரோடு நடிக்கும் இதர நடிகர் – நடிகைகள் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நன்றி : தி இந்து தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.