Breaking News
டயர் பராமரிப்பு டிப்ஸ்

டயர் வாகனங்களின் மிக இன்றியமையாத பகுதியாகும். டயர் பராமரிப்பு எப்படி, டயரில் சரியான காற்றழுத்ததை பராமரிப்பது எவ்வாறு, டயரில் பதியும் கற்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை சோதனை செய்வது எவ்வாறு என தெரிந்து கொல்வோம்.

வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்சிங் விவரங்களை தொடர்ந்து பராமரித்தல் அவசியம். வீல் அலைன்மென்ட் இயல்பாகவே மாறக்கூடியதாகும். சாலைகளில் பயணிக்கும் பொழுது பள்ளங்கள், மேடுகள் என சாலையின் சூழ்நிலைகளுக்கேற்ப டயர் இயங்குவதால் வீல் அலைன்மென்ட் மாறிகொண்டே இருக்கும். முறையான அலைன்மென்ட மற்றும் பேலன்ஸ் இல்லாமல் இருந்தால் டயரில் முறையான தேய்மானம் இருக்காது.
தினமும் 10 நிமிடம் ஒதுக்கி டயரினை சோதியுங்கள். டயரில் தேவையற்ற பொருட்கள் தங்குவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். கற்கள் போன்றவற்றை நீக்கமால் இருந்தால் டயரின் ஆயுட்காலம் பாதிக்கப்படும்.
டயரின் திரெட்களில் கற்கள் தங்க வாய்ப்புள்ளது. அவற்றில் மேடு பள்ளங்கள் ஏற்பட்டால் அந்த இடத்தினை சோதியுங்கள். டயர் முறையான தேய்மானத்தில் இருக்கின்றதா என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.
டயரினை இடம் மாற்றி போடும்பொழுது மெக்கானிக்கின் பரிந்துரையை பின்பற்றுங்கள்.
முறையான தேய்மானம் முன்பற டயர்களில் ஏற்படுவது சிரமம்தான், அதற்க்கு காரணம் முன்புற டயர்களின் அதிக அழுத்தம். முன்புற இடது டயரை பின்புற வலது டயருக்கு மாற்றுங்கள். உதவி டயர்கள் இல்லாத பட்சத்தில் நேராகவே மாற்றிக்கொள்ளுங்கள். உதவி டயர் இருக்கும்பட்சத்தில் கடிகார திசைப்படி டயரினை மாற்றுங்கள். இதனால் 5 டயர்களும் முறையான தேய்மானத்தை அடையும்.
தேய்மான அடைந்த டயர்களை மாற்றிவிடுங்கள். மேலும் புதிய டயர் வாங்கும்பொழுது விலை குறைவானதா இருந்தாலும் தயாரிப்பாளர் பரிந்துரைத்த டயர்களை வாங்குங்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.