பாகிஸ்தான் உருவாக்கிய பயங்கரவாத இயக்கங்கள் அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியுள்ளன: இந்தியா குற்றச்சாட்டு
பாகிஸ்தான் உருவாக்கிய பயங்கரவாத இயக்கங்கள் அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியுள்ளன என்று ஐநா சபையில் இந்தியா குற்றம் சாட்டியது.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் உருவாக்கிய பயங்கரவாத இயக்கங்கள் தற்போது அந்நாட்டிற்கே தீங்கு விளைவிப்பதாக ஐநா சபையில் இந்தியா கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவுக்கான நிரந்தர தூதரான அனில் குமார் பேசுகையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத இயகக்கங்களை பாகிஸ்தான் உருவாக்கியது.
இந்த அரக்கன் தற்போது உருவாக்கியவரையே வேகமாக அழித்து வருகிறது. உலகில் அதிகம் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் இடமாக பாகிஸ்தான் கடந்த 20 ஆண்டுகளாக திகழ்கிறது. ஜம்மு காஷ்மிரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.