Breaking News
ஆதாருடன் 84 திட்டங்கள் இணைப்பு

மத்திய அரசின் சுமார் 84 மக்கள் நலத் திட்டங்கள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட உள்ளன.

கட்டாயமாகிறது ஆதார் எண் :

இது குறித்து, மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை மத்திய அரசின் நேரடி மானிய திட்டத்தின் கீழ் 48 திட்டங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் 50 திட்டங்கள் ஆதாருடன் இணைக்கப்பட உள்ளன. 5 முதல் 18 வயதிற்கு உட்பட்ட 70 சதவீதம் குழந்தைகளுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாத மீதமுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பள்ளிகள் மூலம் ஜூன் 30ம் தேதிக்குள் வழங்கப்படும்.
மத்திய உணவு திட்டம் மட்டுமின்றி, மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தில் சேர்வதற்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும் கல்வி கடன் பெறுவதில் மானியம் பெறுவதற்கும் ஆதார் எண் அவசியம். விரைவில் பிற்படுத்தப்பட்டோர் நல வாழ்வு மையங்கள், மது அடிமைகள் மறுவாழ்வு மையம், முதியோர் காப்பகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.