ஜெயலலிதாவின் “வெயிட்” என்ன தெரியுமா?
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது எடை எவ்வளவு இருந்தது என்பது குறித்த தகவலை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. மேலும் அவர் எந்த நிலைமையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறித்த தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் நீடிக்கும் நிலையில் நேற்று தமிழக அரசு, எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ அறிக்கைகளை மேற்கோள் காட்டி சில தகவல்கள் கொண்ட அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“டாக்டர் கில்னானி தலைமையில் 3 பேர் கொண்ட எய்ம்ஸ் குழு அக்டோபர் 5ம் தேதி இரவு 8.15 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு சென்றது. அப்போது, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு கிரிட்டிகல் கேர் யூனிட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
20 ஆண்டுகளாக சர்க்கரை நோய்
68 வயதான ஜெயலாலிதா கடந்த 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மருந்து, மாத்திரை எடுத்து கொண்டு வந்துள்ளார். மேலும், ஆஸ்துமா போன்ற நோய்களும் இருந்தது.
106 “கிலோ” வெயிட்
சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதா 106 கிலோ எடை இருந்தார். அவரது உயரம் 5 அடி இருந்தது.
சுயநினைவு இல்லை
மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதா மூச்சுவிட சிரமப்பட்டார். மேலும், சுயநினைவு இல்லை, ரத்த கொதிப்பு இருந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பு 7 நாட்களாக காய்ச்சல் மற்றும் சிறுநீராக தொற்று நோயால் அவதிப்பட்டு இருந்தார்.
சர்க்கரை அளவு 400ஆக இருந்தது
அதற்கான சிகிச்சைகளும் எடுத்து கொண்டு இருந்தார். தோல் நோய்க்காக ஸ்டிராய்டு மாத்திரைகளும் எடுத்து வந்தார். அவருக்கு சர்க்கரை நோய் கட்டுபடுத்த முடியாத அளவுக்கு 400 இருந்தது.
கடுமையான மூச்சு திணறல்
ஜெயலலிதாவுக்கு சளி அதிகமாக இருந்ததால் அம்பிசிலின் மற்றும் செபிடிரையாக்சோன் கொடுக்கப்பட்டது. அவருக்கு மூச்சுதிணறலும் அதிகமாக இருந்தது”. இவ்வாறு எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.