உ.பி., மணிப்பூரில் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு துவக்கம்
உ.பி., மணிப்பூர் மாநில சட்டசபைக்கு இறுதிகட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.
இறுதி கட்ட தேர்தல்:
உ.பி.,யில் ஏழு கட்டங்களாகவும், மணிப்பூரில் இரு கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. உ.பி.,யில் முதல் ஆறு கட்ட தேர்தல்களும், மணிப்பூரில் முதல்கட்ட தேர்தலும் முடிவடைந்த நிலையில், இன்று(மார்ச் 8) இரு மாநிலத்திற்கும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. உ.பி.,யில் பிரதமர் மோடியின் வாரணாசி பார்லி., தொகுதி, மற்றும் காஜிப்பூர், ஜான்பூர் உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 22 தொகுதிகளுக்கும் இறுதிகட்ட ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.
பலத்த பாதுகாப்பு:
உ.பி., இன்று தேர்தல் நடைபெற உள்ள 40 தொகுதிகளில் பல, மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு லட்சம் போலீசார் மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஒத்திவைப்பு:
இந்நிலையில் உ.பி., மாநிலம் ஆலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஒருவர் இறந்ததை தொடரந்து, அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, நாளை(மார்ச், 9) ஓட்டுப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசல்ட்:
சட்டசபை தேர்தல் நடைபெற்ற உ.பி., மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள், வருகிற 11ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.