Breaking News
தினம் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு நன்மையா? தீமையா?

னமும் முட்டை சாப்பிடுவது சரியா என்று சிலருக்குத் தயக்கம் இருக்கும். ஆனால் தினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். குறிப்பாக, வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.
முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.

உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) இதில் உண்டு. மேலும், தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு.

காயங்களைக் குணமாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படும் துத்தநாகம் என்னும் தாதும் இதில் உள்ளது. முட்டை நமது கண்களின் கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை நோய்களை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது. முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் உள்ளது.

உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு 5 சதவீதம் உள்ளது. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் டி முட்டையில் உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.