Breaking News
விதவைகளை இனி ‛‛கல்யாணி” என்றே அழைக்கலாமே : ம.பி. முதல்வர் பேச்சு

கணவனை இழந்த மனைவிகள் விதவைகள் என அழைக்கப்படமாட்டார்கள் அவர்கள் கல்யாணி என்றே அழைக்கப்படுவார்கள் என ம.பி. முதல்வர் கூறினார்.

ம.பி.யில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் முதியோர், விதவைகள், ஆகியோருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையி்ல், மகளிர் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நாட்டில் கணவனை இழந்த பெண்கள், இளம் பெண்கள் தங்களது உறவினர்களாலும், சமுதாயத்திலும் பெருமளவு புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் மனதளவில் வேதனை அடைகின்றனர். இந்த அவல நிலையை போக்கிட இனி அவர்களை விதவைகள் என அழைக்காமல் ‛‛கல்யாணி” என்ற அழைக்கப்படுவர். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக் கான ஓய்வூதிய திட்டத்திற்கு ரேசன் கார்டு கட்டாயமாக்கப்படாது என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.