Breaking News
அமெரிக்காவில் கலக்கும் இந்திய வம்சாவளி பெண்கள்

அமைச்சரவை முதல் அறிவியல் வரை பெரும்பாலான அமெரிக்க துறைகளில் இந்திய வம்சாவளிப் பெண்கள் முக்கிய இடம்பிடித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் இந்திய பெண்கள் :

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியாவை சேர்ந்த நிக்கி ஹாலே டிரம்ப் அவையில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் சுகாதாரத் துறையின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான சீமா வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி மாணவி இந்திராணி தாசுக்கு பிரசித்தி பெற்ற ரீஜெனரான் அறிவியல்திறன் ஆராய்ச்சி போட்டியில் முதன்மை விருது வழங்கப்பட்டுள்ளது. 17 வயதாகும் இந்திராணி தாஸ், மூளையில் காயம் ஏற்படுகிறபோது அல்லது நரம்புச்சிதைவு நோய் ஏற்படுகிறபோது நரம்பு செல்களான நியூட்ரான்கள் செத்து விடாமல் தடுக்கும் சிகிச்சை குறித்து ஆராய்ச்சி நடத்தி சாதனை படைத்துள்ளார்.
மற்றொரு இந்திய வம்சாவளி மாணவரான இண்டியானாவை சேர்ந்த அர்ஜூன் ரமணி (18, இந்த போட்டியில் 3-வது பரிசை வென்றார். அவர் வரைபட கோட்பாட்டையும், கம்ப்யூட்டர் புரோகிராமிங்கையும் இணைத்து நெட்வொர்க் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இவர்களைப் போன்று இந்திய வம்சாவளி மாணவ, மாணவியரான அர்ச்சனா வர்மா, பிரதிக் நாயுடு, பிருந்தா மதன் உள்ளிட்டவர்களும் இந்த போட்டியில் பரிசுகளை தட்டிச்சென்றுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.