Breaking News
சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் 27-ம் தேதி நேரில் ஆஜராகாவிட்டால் வாரன்ட் பிறப்பிக்கப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

நிலுவை வழக்குகள் குறித்த விவ ரங்களை தாமதமாக தாக்கல் செய்த விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் வரும் 27-ம் தேதி ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் ஆஜராகாவிட்டால் பிணையில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ஜாமீன் மனு மீதான விசார ணையின்போது, நீதிபதி எஸ்.வைத்தியநாதன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2011 வரை நிலுவையில் உள்ள வழக்கு களின் தற்போதைய நிலை, இதில் எத்தனை வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை 4 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜுக்கு உத்தர விட்டிருந்தார். இதன்படி அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் ஆணையர் ஜார்ஜ் நேற்று (மார்ச் 20) உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தர விடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆணையர் ஜார்ஜ் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கோவிந்தராஜ், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி மத்திய குற்றப் பிரிவில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள் குறித்த அறிக்கை கடந்த 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுவிட்டது’‘ என்றார்.

அப்போது நீதிபதி, “இந்த வழக்கு கடந்த 17-ம் தேதி விசார ணைக்கு வந்தபோது அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால், தற்போது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது எப்படி நடந்தது? உயர் நீதிமன்ற பதிவுத்துறை யாருடைய அனுமதி யின் பேரில் அவ்வாறு குறிப் பிட்டுள்ளது?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு வழக்கறிஞர் கோவிந்தராஜ், ‘‘உயர் நீதிமன்றத் தின் உத்தரவை அவமதிக்கும் எண்ணம் இல்லை. இந்த தகவலை ஓட்டேரி போலீஸார், ஆணையரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வில்லை. அதனால்தான் கால தாமதம் ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் கடந்த 17-ம் தேதி உயர் நீதிமன்ற பதிவுத்துறை யில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுவிட்டது’’ என்றார்.

“ஓட்டேரி போலீஸார் தகவல் தெரிவிக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். அதற்காக நீதிமன்றம் உத்தர விட்டும் நீதிமன்றத்தில் ஆஜரா காமல் இருப்பதா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர் நீதிபதி, ‘‘தற்போது தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை பிப்ரவரி 2-ம் தேதி தயாரிக்கப் பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் மார்ச் 17-ம் தேதிதான் தாக்கல் செய்ததாக கூறுகிறீர்கள். எனவே விசார ணையை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்றைய தினம் ஆணையர் எஸ்.ஜார்ஜ் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டார். அன்றைய தினம் ஆஜராகவில்லை என்றால், அவருக்கு பிணையில் வர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப் படும் என்று நீதிபதி எச்சரித்தார்.

மற்றொரு வழக்கில் விலக்கு

சென்னை மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலராக பதவி வகித்த அண்ணாமலை தனது சொத்து விவரங்களை மறைத்துவிட்ட தாகவும், சொற்ப தொகையை வரியாக செலுத்தியதாகவும் கூறி ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இதன்பேரில் கவுன்சிலர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்த வழக்கின் மனுதாரரான பொன்.தங்க வேலுவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை.

இதையடுத்து காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆணையர் ஜார்ஜ் மார்ச் 22 அன்று நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக்கோரி எஸ்.ஜார்ஜ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆணையர் எஸ்.ஜார்ஜ் இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.