Breaking News
செலவு குறைவான நகரம்; சென்னைக்கு 6வது இடம்

உலகளவில், செலவு குறைவாக ஆகும் நகரங்கள் பட்டியலில், ஆறாவது இடத்தை சென்னை பிடித்துள்ளது.

ஆய்வு:

வாழ்க்கை நடத்துவதற்கு செலவு குறைவாக ஆகும் நகரங்கள் மற்றும் அதிகமாக செலவு ஆகும் நகரங்கள் பற்றிய, சர்வதேச அளவிலான ஒரு ஆய்வை, பொருளாதார புலனாய்வு பிரிவு மேற்கொண்டது.

ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வதேச அளவில், மிகவும் குறைவாக செலவாகும் நகரங்களில், முதலிடத்தை கஜகஸ்தானின் அல்மாட்டி நகரம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை நைஜீரியாவின் லாகோஸ் நகரம் பிடித்துள்ளது. இந்தியாவின் பெங்களூரு, மூன்றாவது இடத்தையும், சென்னை ஆறாவது இடத்தையும், மும்பை ஏழாவது இடத்தையும், டில்லி, 10வது இடத்தையும் பிடித்துள்ளன.

சிங்கப்பூருக்கு முதலிடம்:

அதிக செலவாகும் நகரங்களில் முதலிடத்தை, தொடர்ச்சியாக, நான்காவது முறையாக, சிங்கப்பூர் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஹாங்காங்கும், மூன்றாவது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரமும் பிடித்துள்ளன.

ஆண்டுதோறும்..

உணவு, உடை, வீட்டுப் பொருட்கள், வீட்டு வாடகை, போக்குவரத்து, தனியார் பள்ளிகள், பொழுதுபோக்கு செலவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, இந்த அறிக்கையை, பொருளாதார புலனாய்வு அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.