ரொக்க பரிவர்த்தனை:ரூ.2லட்சத்திற்கு மேல் 100 சதவீதம் அபராதம்
ரொக்க பரிவர்த்தனை உச்ச வரம்பை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ரூ.2லட்சத்துக்கு மேல் ரொக்கப்பரிவர்த்தனை செய்தால் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.ரொக்க பணப்பரிமாற்றத்திற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
பட்ஜெட் அறிவிப்பின்போது 3 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்க பணப் பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்து இருந்தார். அப்படி பரிவர்த்தை செய்தால் அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
ரூ.3லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக குறைப்பு
இந்நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்க பரிவர்த்தனையில் ஈடுபட்டால் 100 சதவீதம் அபராதமாக விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து பத்திரிகையாளர்களிடம் மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா, கூறியதாவது:ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக குறைக்கப்பட உள்ளது என்றார்.