டிஜிட்டல் பரிவர்த்தனை:கூகுளுடன் அரசு ஒப்பந்தம்
பாதுகாப்பான முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள வழிவகை செய்வதற்காக கூகுள் நிறுவனத்துடன் மத்திய அரசு, புதிய ஒப்பந்தம் ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளது.
கூகுளுடன் ஒப்பந்தம் :
பாதுகாப்பான மின்னணுப் பணப்பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசும் கூகுள் நிறுவனமும் கைகோர்த்துள்ளன. கூகுள் நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிரிவு துணைத் தலைவர் ராஜன் ஆனந்தனும் மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகச் செயலாளர் சுந்தரராஜனும் நேற்று சந்தித்து, இது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் இதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.
இது தொடர்பாக டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், மின்னணு பணப்பரிமாற்றம் செய்வதன் அவசியம் குறித்தும் அதை பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்தும் தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும் என ராஜன் ஆனந்தன் பேசினார்.