Breaking News
LiFi வந்தாச்சு, இனி WiFi-க்கு பை பை!!

தற்போதைய வைஃபை-யை விட 100 மடங்கு வேகத்தில் இயங்கக்கூடிய லைஃபை புதிய தொழில்நுட்பத்தை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வைஃபை கருவியின் மூலம் பல நபர்கள் ஒரே நேரத்தில் வைஃபை-ஐ பயன்படுத்தினால் அதன் வேகம் குறையும். இந்நிலையில் நெர்தர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் அதன் வேகத்தை எப்படி அதிகப்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் அகசிவப்புக் கதிர்களை பயன்படுத்தி விநாடிக்கு 40 ஜிபி-க்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினை வேகத்தடையின்றி பெற முடியும் என்று கண்டறிந்தனர்.

ஒளிகள் மூலம் இணைய இணைப்பை பெறுவதால் இதற்கு LiFi என பெயரிட்டுள்ளனர். விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.