கணக்கில் காட்டப்படாத வருமானம் ரூ.45 ஆயிரம் கோடி
பார்லிமென்டில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்குவார் எழுத்து மூலம் ஒரு கேள்விக்கு நேற்று பதில் அளிக்கையில் தெரிவித்தாவது, 2013-2014, 2014-15, 2015-16 மற்றும் நடப்பு நிதி ஆண்டில் ஜனவரி மாதம் வரையில் 2 ஆயிரத்து 534 தரப்பினரிடம் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளில், கணக்கில் வராத ரூ.45 ஆயிரத்து 622 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி சோதனைகளில் கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், ரூ.3 ஆயிரத்து 625 கோடி மதிப்பிலான ரொக்கப்பணமும், நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. வருமான வரி சட்டத்தின் கீழ் கிரிமினல் கோர்ட்டுகளில் 116 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.3 ஆயிரத்து 218 விவகாரங்களில் சம்பந்தப்பட்ட நபர்களும், வருமான வரித்துறையினரும் பேசி சமசரம் செய்து கொண்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.