Breaking News
8 மாவட்டங்களில் 100டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிய வெயில்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் மக்களை வாட்டி எடுத்து வருகிறது.கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே தமிழகத்தின் பல பகுதியில் வெயிலால் மக்கள் படாதபாடு பட்டு வருகிறார்கள்.
@subtitle@ அதிகபட்சம் கரூரில்106 டிகிரி பாரன் ஹீட்

இந்நிலையில், அதிகபட்சமாக கரூரில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால் அங்கு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கரூர் பரமத்தியில் 104 டிகிரி பாரன்ஹீட், வேலூர், கோவை, தருமபுரி உள்ளிட்ட நகரங்களில் 101 டிகிரிபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மதுரை, நெல்லை,திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. தலைநகர் சென்னையில் 93 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 70 டிகிரி பாரன்ஹீட் கொடைக்கானலில் பதிவாகியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.