ஜன்தன் கணக்கிற்கு ரூ.775 கோடி செலவு
ராஜ்யசபாவில், நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், எழுத்து மூலம் அளித்த பதில்:பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட கணக்குகள் தொடர்பாக, வங்கிகள் ரீதியாக, ஒவ்வொரு ஆண்டுக்கும் தகவல்கள் பராமரிக்கப்படவில்லை. இருப்பினும், ஜன்தன் கணக்குகள் பராமரிப்பிற்காக, 2016, டிசம்பர் வரை, பாரத ஸ்டேட் வங்கி, 775 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.