Breaking News
ஆர்.கே.நகரில் சிசிடிவி கேமிராக்கள்: பணபட்டுவாடாவை தடுக்க அதிரடி

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க நகரின் முக்கிய சாலைகள், சோதனைச் சாவடிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. தொகுதியை கண்காணிக் ஏற்கனவே 5 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பணப்பட்டுவாடா

ஆர்.கே.நகரில் பல இடங்களில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக தேர்தல் கமிஷனுக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன. இதையடுத்து சென்னை வந்த துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்ஹா தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின் முடிவில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தொகுதியின் முக்கிய சாலைகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தவும். தொகுதியில் உள்ள 256 ஓட்டுச்சாவடிகளிலும் வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கவும் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

ரோந்துப்பணி

இன்று (மார்ச் 31) முதல் தேர்தல் முடியும் வரை இரண்டு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இது தவிர தொகுதிக்கு வெளியே பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த 5 தனிப்படைகள் அமைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.