பார்லி.,க்கு வராத சச்சின் பதவி விலகட்டும்: சமாஜ்வாதி எம்.பி.,
‛ராஜ்யசபா நியமன எம்.பி.,யான சச்சின் டெண்டுல்கர் பார்லி.,க்கு வருவதில்லை; அவருக்கு விருப்பமில்லை என்றால் பதவி விலகட்டும்’ என சமாஜ்வாதி எம்.பி., தெரிவித்தார்.
விவாதம்:
ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின்போது, சமாஜ்வாதி கட்சியின் நரேஷ் அகர்வால் பேசியதாவது: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், நடிகை ரேகா போன்ற நியமன உறுப்பினர்கள், சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதே இல்லை. இவ்வாறு தொடர்ந்து வராமல் இருப்பது, அவர்களுக்கு, இதில் விருப்பமில்லை என்றே தோன்றுகிறது. அவ்வாறு விருப்பமில்லாவிட்டால், பதவியை ராஜினாமா செய்யட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கடிதம்:
அதற்கு பதிலளித்த, சபை துணைத் தலைவர், பி.ஜே.குரியன், ”நீங்கள் வேண்டுமானால், அவர்களுடன் பேசி, சபைக்கு வரும்படி கூறலாமே,” என்றார். உடனடியாக கடிதம் எழுதுவதாக நரேஷ் அகர்வால் கூறினார்.
ராஜ்யசபாவில், சச்சின் டெண்டுல்கர், ரேகா, சுப்பிரமணியன் சாமி, சுரேஷ் கோபி, மேரி கோம் உட்பட, 12 பேர் நியமன எம்.பி.,க்களாக உள்ளனர்.