வில்லோ மரங்களை ஊட்டியில் பார்க்கலாம்
கிரிக்கெட் மட்டை, மரத்தினால் ஆன விளையாட்டு பொம்மைகள் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த வில்லோ மரங்களை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா மற்றும் மரவியல் பூங்காவில் கண்டு ரசிக்கலாம். வெளிநாடுகளில் மட்டும் காணப்படும் வில்லோ மரங்கள் மருத்துவ குணம் நிறைந்ததாக கூறப்படுகிறது. இந்த மரங்களில் இருந்து பல்வேறு வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த மரங்கள் குளிர்ந்த பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளில் மட்டும் வளரக்கூடியவை. மண் சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படாமல் இருக்க மலைப் பிரதேசங்களிலும் இந்த மரங்கள் அதிகளவு வளர்க்கப்படுகின்றன. சீனா, ஸ்பெயின், அமெரிக்கா, லத்தீன் போன்ற நாடுகளில் அதிகளவு இந்த மரங்கள் வணிக ரீதியாக வளர்க்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்தில் கொண்டு வரப்பட்டது.
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, லவ்டேல் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. இந்த மரத்தில் இருந்து தான் கிரிக்� கட் மட்டை (கிரிக்கட் பேட்) தயாரிக்கப்படுகிறது. இந்த மரக்கட்டைகளை பதப்படுத்தி பின் கிரிக்கெட் செய்யப்படுகிறது. மற்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் மட்டைகளை காட்டிலும் இந்த மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் மட்டைகள் மிகவும் மிருதுவான அதே சமயம் அதிக காலம் உழைக்க கூடியதாகவும் இருக்கும்.
இதனால் பெரும்பாலான கிரிக்கெட் மட்டை தயாரிக்கும் கம்பெனிகள் இந்த மரக் கட்டைகளையே பயன்படுத்துகின்றன. அதே போல் இந்த மரங்களில் இருந்து பல்வேறு வகையான மர பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் குறைந்த அளவிலேயே இந்த வில்லோ மரங்கள் காணப்படுகிறது. எனவே இவைகளை தோட்டக்கலைத்துறையினர் மற்றும் வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். ஊட்டி சென்றால் இந்த மரங்களை பார்க்கலாம்.