மசாலா பாவ்
என்னென்ன தேவை?
பாவ் பன் – 4
எண்ணெய் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வெண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1/2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி – 4
பாவ் பாஜி மசாலா தூள் – 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – சிறிது
நறுக்கிய கொத்தமல்லி – சிறிது
எலுமிச்சை சாறு – தேவைக்கு
தண்ணீர் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து பின் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, குடைமிளகாய், தக்காளி சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும். இதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் பாவ் பாஜி மசாலா சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு சிறிது உப்பு போட்டு எலுமிச்சை சாறு பிழிந்து கலக்கவும். பின் கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். அதே கடாயில், சிறிது வெண்ணெயை உருகி ஒரு பக்கத்தில் சிறிதளவு மசாலா கலவையை வைத்து, மறுபக்கத்தில் பாவ் பன்னை வைத்து இரு பக்கமும் டோஸ்ட் செய்யவும். இப்போது மசாலா கலவையை பன்னின் உள்ளே வைத்து மேலும் சிறிது மசாலாவை பன்னில் மேலே கோட் செய்து பரிமாறவும்.