Breaking News
நாட்டின் நீளமான சுரங்கப்பாதை; பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தொழில் நுட்ப வசதிகள்:
ஜம்முவையும் காஷ்மீரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே மலைப்பகுதியில் 9.2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை ஆகும். இந்த சுரங்கப்பாதையால் வாகன ஓட்டிகளுக்கு 2 மணி நேரம் மிச்சமாகும். ஆண்டுக்கு ரூ.99 கோடி மதிப்பிலான எரிபொருளும் சேமிக்கப்படும். ரூ.3,700 கோடி செலவில், பல தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று ( 2ம்தேதி) திறந்து வைத்தார். தொடர்ந்து அந்த பாதையில் பிரதமர் பயணித்தார். விழாவில் காஷ்மீர் கவர்னர், முதல்வர் முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பலத்த பாதுகாப்பு :

பிரதமரின் வருகையையொட்டி ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.