‘முகநூலில்’ தவறான பதிவு ரூ. 3 கோடி அபராதம்
சமூக வலைதளமான ‘முகநுாலில்’ தவறான தகவலை பதிவிட்ட அமெரிக்க பெண்ணுக்கு, வடக்கு கரோலினா நீதிமன்றம், மூன்று கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
அமெரிக்கா ஆஸ்வில்லே பகுதியை சேர்ந்தவர் ஜாக்குலின் ஹாமண்ட். இவர் 2015ல் டாவ்யின் டயல் என்ற முன்னாள் நண்பரின் ‘முகநுால்’ பக்கத்தில், ‘நான் குடித்து விட்டு என் மகனை கொலை செய்யவில்லை’ என பதிவிட்டார். இப்பதிவு, டாவ்யின் டயலுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இவர், தனது மகனை விபத்து ஒன்றில் பறிகொடுத்திருந்தார்.
இதையடுத்து டயல், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி, ‘கருத்து சொல்வதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் உண்மைக்கு புறம்பான, அடுத்தவர் மனதை காயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பது தவறு. இதனால் ஹாமண்ட், 3.2 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்’ என உத்தரவிட்டார்.