Breaking News
இந்திய கலாசாரத்தின் தூதர் நான்: தலாய் லாமா

இந்தியாவின் நீண்ட கால விருந்தாளியாக இருக்கும் நான், தற்போது இந்திய கலாசாரத்தின் தூதராக மாறி இருக்கிறேன் என திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா தெரிவித்தார்.

பரம ரகசியம்:

கவுகாத்தியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: என்னை பார்க்கும் அனைவருமே, வயதாகி விட்டாலும், மிக அழகாக தோற்றமளிப்பதாகவும், அதன் ரகசியம் என்ன என்றும் கேட்கின்றனர். ஆனால், அந்த ரகசியத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன். உடலின் வெளிப்புற அழகை விட, உட்புற அழகிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இந்திய தூதர்:

நான் கடந்த 58 ஆண்டுகளாக இந்திய அரசின் நீண்ட கால விருந்தாளியாக இருந்து வருகிறேன். தற்போது இந்திய கலாசாரத்தின் தூதராக மாறி இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.