நவாஸ் ஷெரீப் ‘கிட்னி’யில் கல்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின், ௬௭, சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரிந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த ஆண்டு லண்டனில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.இதில் இருந்து மீண்ட இவருக்கு நேற்று முன்தினம் வயிற்று வலி ஏற்பட்டது. அவரது சிறுநீரகத்தில் சிறிய கல் இருப்பது கண்டறியப்பட்டது. பெரிய பாதிப்பு இல்லை என்பதால் மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பினார்.அவரது மகள் மர்யம் கூறியதாவது:எனது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக வீண் வதந்தி கிளப்பப்படுகிறது. வயிற்று வலி காரணமாக லாகூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ‘சிடி’ ஸ்கேன் சோதனையில் இடது சிறுநீரகத்தில் சிறிய கல் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு பின் வீடு திரும்பி விட்டார். ‘நிறைய தண்ணீர் குடித்தாலே, கல் கரைந்து விடும்’ என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர், என்றார்.