Breaking News
20,876 வாகனங்கள் மார்ச் 31ல் பதிவு

வாகனப் புகை மாசு குறைக்கும் நடவடிக்கையாக, ‘பி.எஸ்., – 3’ வாகனங்களை விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கான கெடு முடியும் நாளான, மார்ச், 31ல், தமிழகத்தில், வாகனப் பதிவு, மூன்று மடங்கு அதிகரித்தது.
நாடு முழுவதும், ஏப்ரல், 1 முதல், புகையை குறைவாக வெளியிடும், ‘பி.எஸ்., – 4’ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தான் வாகனங்களைத் தயாரிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், ‘பி.எஸ்., – 3’ வாகனங்களை விற்பதற்கு கடைசி நாளில், பல மடங்கு தள்ளுபடி செய்யப்பட்டது.அதனால், வழக்கத்தைவிட, வாகன விற்பனை பல மடங்கு அதிகரித்தது. அன்று, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவான வாகனங்களின் எண்ணிக்கை குறித்து,
அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், புதிய வாகனங்களின் பதிவைப் பொறுத்தவரை, தினசரி, 5,000 முதல் அதிகபட்சம், 7, 000 வரை இருக்கும். மார்ச், 31ல், மாநிலம் முழுவதும், 20 ஆயிரத்து 876 வாகனங்கள் பதிவாகின. இதில், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களின், தனிப்பட்ட எண்ணிக்கையை தொகுக்கும் பணி நடந்து வருகிறது.

வாகனங்களை, மார்ச், 31ல் வாங்கியதற்கான ஆதாரத்தை காட்டினால், அவற்றை பதிவு செய்ய தடை இல்லை; அதற்கு, கடைசி தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.