Breaking News
அமெரிக்காவில் கடுமையான சூறாவளி அச்சுறுத்தல்: வீடுகள் சேதம், வாகனங்கள் நீரில் மூழ்கின

தெற்கு கரோலினா: அமெரிக்காவின் தென் கிழக்கு மற்றும் மத்திய மேற்கு மாகானங்களை புரட்டிப்போட்ட சூறாவளி மற்றும் இடியுடன் கூடிய பயங்கர மழையினால் சாலையெங்கிலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மோசமான வானிலையால் அமெரிக்காவில் இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள், தீயணைப்பு வாகனங்கள் மூழ்கியுள்ளன. பலத்த காற்றால் வீடுகள், வேலிகள் சேதமடைந்துள்ளன. அமெரிக்காவின் அலபாமா, ஜார்ஜியா, கென்டக்கி, தெற்கு கரோலினா ஆகிய மாகானங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இம்மாகானங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அமெரிக்க வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.