ஏப்.,15 முதல் மீன்பிடி தடைக்காலம்
மீன்கள் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்.,15 முதல் 45 நாட்கள் வங்க கடல் பகுதியில் மீன்பிடிப்புக்கு தடை விதிக்கப் படுகிறது. கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கடலோரப் பகுதிகளில் இந்த தடை அமலில் இருக்கும். இந்த காலத்தில் விசைப் படகுகள் பழுது பார்க்கும் பணி நடைபெறும். அரசு சார்பில் மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். தடைக்காலத்தில் சிறிய படகுகள் மற்றும் வள்ளங்கள் மட்டுமே குறிப்பிட்ட துாரத்துக்கு சென்று மீன்பிடிக்க முடியும் என்பதால் மீன்களின் விலையும் அதிகமாக இருக்கும்.