Breaking News
தூக்கம்…குழந்தைகளையும் வாட்டும் கொடுமை ; மனஅழுத்தத்துக்கு முக்கிய காரணம்

இன்றைய சூழலில், பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகள்கூட தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்துக்கு அளவே இல்லை. தூக்கம் இழப்பதால் குழந்தைகள் சந்திக்கிற உடல்மற்றும் மன ரீதியான பாதிப்புகளைப் பற்றிய அறிமுகத்துடன் பேச ஆரம்பிக்கிறார் தூக்கக்குறைபாடுகளின் சிறப்பு மருத்துவரான ராமகிருஷ்ணன்.அவர் கூறியதாவது: தூக்கம் என்பது உடலுக்கு ஓய்வு என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில்தூக்கத்தில்தான் உடல் தனக்குத் தேவையான பலவித மாற்றங்களை செய்து கொண்டு,தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. வளர்கிற குழந்தைகள் நன்றாக தூங்கினால்தான், கல்வித்திறன், உடல் வளர்ச்சி,நினைவாற்றல் உள்பட பலவிதத்திலும் அவர்களது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். தூக்கம்கெட்டால் எல்லாமே கெடும்.

தூக்கத்தில் முதல்நிலை தூக்கம், இரண்டாம் நிலை தூக்கம், ஆழ்ந்த நிலைதூக்கம் என 3 நிலைகள் இருக்கின்றன. இதில் ஆழ்ந்த நிலை தூக்கம் குழந்தைகளுக்குக் கிடைக்காவிட்டால்,உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி இரண்டும் பாதிக்கும்.பெண் குழந்தைகளுக்கு ஹார்மோன்குளறுபடியால் எதிர்காலத்தில் மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகளும் ஏற்படலாம்.ஸ்கூல், டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ், டான்ஸ் என்று மாணவர்கள் இன்று ஓடிக்கொண்டே இருப்பதால், 6 மணி நேரம் தூங்கினாலே பெரிய விஷயம் என்று மாறிவிட்டது.படிப்பு ஏற்படுத்துகிற பதற்றங்களால் தூக்கத்தின் இடையிடையே எழுந்து படிப்பதும் ஒருபழக்கமாகிவிட்டது.இதனால், கல்வியில் கவனம் குறைவது, மற்ற மாணவர்களுடன் சுமுகமான உறவு இல்லாமல் போவது.

ஹைப்பர் ஆக்டிவிட்டி என்று சொல்லக் கூடிய தேவையற்ற பரபரப்பு போன்றவை உருவாகின்றன. லெப்டின் என்ற ஹார்மோனால் பருமன் ஏற்படுவது, தைராய்டு குறைபாடுகள் போன்ற பிரச்னைகளும் தூக்கமின்மையால் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. பெரியவர்களுக்கு முதல்நாள் தூக்கம்கெட்டுப் போனாலே, அடுத்த நாள் கண்கள் எரிச்சலாக இருக்கும், வேலைகளில்கவனம் செலுத்த முடியாது, கோபம் அதிகமாக வரும். குழந்தைகளுக்கோ,இதுபோன்ற தூக்கமின்மை தொடர்கதையானால், பெரியவர்களைவிட அதிக பாதிப்புகள் ஏற்படும். 40 வயதுக்கு மேல் ஏற்படும்ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் போன்ற குறைபாடுகள் இளவயதிலேயே வரும் சாத்தியங்களும் உள்ளன. குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்பெற்றோர் ஏதேனும் ஒருவிதத்தில் அவர்களை ஓடவைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், தூக்கமின்மையால் கல்வி உள்படபலவிஷயங்களிலும் அவர்களது எதிர்காலமே பாதிப்புக்குள்ளாகலாம் என்பதை மறக்கக் கூடாது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.