ரெய்டு:சுப்ரமணியன்சாமி கருத்து
பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கோவையில் அளித்த பேட்டி: திமுக காங்கிரஸோடு இணைந்து பெரிய அளவுக்கு தேசிய அளவில் ஊழல் செய்திருப்பதால் மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடலாம். திமுகவுக்கு ஓட்டுப்போட வேண்டாம்.
தருண் விஜய் வெள்ளைக்காரன் எழுதியதை வைத்து பேசினார். நிறத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது காஷ்மீர் முதல் கன்னியகுமாரி வரை அனைவருக்கும் ஒரே ஜீன் தான் எனவும் கூறினார்.தருண் விஜய் அந்த புத்தகத்தை தெளிவாக படிக்க வேண்டும்
டில்லியில் போராடும் விவசாயிகள் தன்னிடம் குறை ஒன்றையும் சொல்லவில்லை, அவர்களின் போராட்டம் குறித்து தனக்கு தெரியாது . முல்லைபெரியாறு விவசாயிகள் வேண்டுகோள் கொடுத்ததின் பேரில் உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கில் வெற்றி பெற்றுக்கொடுத்தேன். பார்லிமென்டில் நாற்பது எம் பிக்கள் விவசாய அமைச்சரையும், பிரதமரையும் சந்திக்க வேண்டும்.
சசிகலாவை அடுத்து சோனியா , பா.சிதம்பரம்,அவரது மனைவி, கார்த்தி மற்றும் கனிமொழி,ராஜா ஆகியோர் சிறை செல்வதற்கு தயாராக இருக்கின்றனர்.
நான் பொருக்கி என்று சொல்லாததை சொன்னதாக கூறியவர்கள் நிருபிக்க வேணும் என சாவல்விட்டும் யாரும் நிருபிக்கப்படவில்லை.
வருமான வரித்துறை சோதனை நடத்தினால் தேர்தல் நிறுத்தப்படும் என்று எந்த சட்டத்திலும் சொல்லப்படவில்லை.
ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் பகுதியிலும், கேரளாவிகும் இருப்பதாகவும், இதை ஒடுக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா ஒரு கூட்டுபடையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.