விமானத்தில் தவறாக நடந்தால் பயணம் செய்ய தடை – மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா அதிரடி
விமானத்தில் ஊழியர்கள் மற்றும் சக பயணிகளிடம் அத்துமீறி நடந்துகொள்ளும் பயணிகள், விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மதுரை வந்த விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள், ஊழியர்களிடத்திலோ அல்லது சக பயணிகளிடத்திலோ தவறாக நடந்துகொண்டால், அவ்வாறு நடந்துகொள்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், இந்தியாவின் சிறுநகரங்களில் விமான நிலையம் அமைக்கும் முயற்சி நடை வருகிறது.வெறும் 200 கோடி ரூபாயில், 33 விமான நிலையங்கள் அமைத்துள்ளோம். தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. அங்கு விமான நிலையம் உருவாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என ஜெயந்த் சின்ஹா கூறினார்.