Breaking News
ஹெல்மெட் போடுங்க : சச்சின் நூதன பிரசாரம்

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என்பதில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மிகவும் உறுதியாக உள்ளார்.

இதுதொடர்பாக, சச்சின் டெண்டுல்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். மும்பையில்,தனது கார் நின்றிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் இருந்துவந்து தன்னுடன் செல்பி எடுக்க வந்தவரிடம், வண்டி ஓட்டும்போது நிச்சயமாக ஹெல்மெட் அணியவேண்டும், செய்வீர்களா என்று கேட்கும் சச்சின், அவர் அணிவேன் என்று சொல்லும் வரை அவருக்கு அறிவுரை கூறுகிறார். ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டுவது மிகவும் ஆபத்தான ஒன்று என்றும் அவருக்கு அறிவுரை சொல்கிறார். ஹெல்மெட் அணிவேன் என்று அவரிடம் உறுதிமொழியையும் சச்சின் பெறுகிறார்.

பின், இருசக்கர வாகனத்தில் தன்னை கடந்துசெல்லும் தம்பதியிடமும், ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என்பதை சச்சின் வலியுறுத்துகிறார்.

ஹெல்மெட் அணியாதது, குடித்துவிட்டு வாகனங்களை இயக்குதல், சாலைவிதிகளை மீறுதல் உள்ளிட்ட செயல்களால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் சாலைவிபத்துகளில் பலியாகிவருகின்றனர். சச்சினின் இந்த வீடியோ உள்ளிட்ட இதுபோன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களில், திரைநட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபடும் நிலையில், அவர்களை பின்தொடரும் இளையதலைமுறையினர் திருந்தி செயல்படுவர் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.