ஆதார் எண் பதிவில் முறைகேடு: 3 மாதங்களில் 1000 பேர் சஸ்பெண்ட்
ஆதார் எண் பதிவில் முறைகேடு களில் ஈடுபட்டதாக கடந்த 3 மாதங்களில் 1,000 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 113 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளோருக்கும் ஆதார் எண் விரைவில் வழங்கப்படும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ) தெரிவித்துள்ளது.
ஆதார் எண் பதிவுக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. எனினும் ஆதார் திருத்தப் பணிகளுக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை மீறி சில இடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இதுதொடர்பாக யு.ஐ.டி.ஏ.ஐ. தலைவர் அஜய் பூஷண் பாண்டே, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
ஆதார் பதிவில் முறைகேடு களை சகித்துக் கொள்ளமாட் டோம். சில இடங்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர் பாக கடந்த 3 மாதங்களில் 1000 ஊழியர்களை சஸ்பெண்ட் செய் துள்ளோம். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 20 பேர் மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்