Breaking News
மம்தா தலைக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்த பா.ஜ.,க

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என பா.ஜ., இளைஞர் அணியான பா.ஜ., யுவ மோட்சா தலைவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊர்வலத்தில் தடியடி :

மேற்குவங்கத்தின் பிர்பம் மாவட்டம் சூரி பகுதியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அப்பகுதியில் ஊர்வலம் செல்வதற்கோ, பொதுக்கூட்டம் நடத்துவதற்கோ போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஊர்வலத்தில் ஆயுதங்கள் ஏதும் பயன்படுத்தப்படாத என அளிக்கப்பட்ட உறுதியையும் போலீசார் ஏற்கவில்லை. இதனால் தடையை மீறி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். இந்த தடியடி தாக்குதலுக்கு பா.ஜ., இளைஞர் அணி தலைவர் யோகேஷ் வர்ஷினே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மம்தா தலைக்கு பரிசு :

அப்போது அவர் கூறுகையில், ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். அவர்கள் பக்தர்கள் மட்டுமே. அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. மம்தா அரசு முஸ்லீம்களை திருப்திப்படுத்துவதற்காக இந்துக்களை குறிவைத்து அடக்கு முறையில் ஈடுபட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் மம்தாவில் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதனால் மேற்குவங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.