Breaking News
சென்னை அண்ணா சாலையில் விரிசல்

சென்னை அண்ணா சாலையில், விரிசல் ஏற்பட்டது விரைந்து வந்த ஊழியர்கள் அதனை சரி செய்தனர்.
சென்னை அண்ணா சாலையில், நேற்று முன்தினம்(ஏப்ரல் 10) பள்ளம் உருவான பகுதியில் 10 அடி நீளத்திற்கு விரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணி காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில், விரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனையறிந்த ஊழியர்கள் விரைந்து வந்து, தடுப்புகள் அமைத்து, பள்ளம் ஏற்படாத வகையில் விரிசலை சரி செய்தனர். தொடர்ந்து சோதனைக்கு பின்னர் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
நேற்று முன்தினம் உருவான பள்ளம், நேற்று தான் சரி செய்யப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட மறுநாளே விரிசல் ஏற்பட்டது பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், போலீசார் வாகனங்களை சரி செய்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.