பெண்ணின் கவுரவத்துக்கு எதிரானது ‘தலாக்’: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
முஸ்லிம்களில் மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறும் முறை, பெண்களின் கவுரவத்துக்கு எதிரானது; அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்’ என, சுப்ரீம் கோர்ட்டில்,
மத்திய அரசு மீண்டும் தெரிவித்து உள்ளது.
மனு தாக்கல்:
தலாக் நடைமுறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பாக, ‘ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, வரும், மே, 11 முதல் விசாரிக்கும்’ என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை குறித்து மத்திய அரசின் சார்பில், மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
எதிரானது:
அதில் கூறியுள்ளதாவது: மும்முறை தலாக் பெறும் முறையானது, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது; இது பாலியல் ரீதியில் பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்களில் ஆண்களுக்கு உள்ள உரிமைகள் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.
மேலும், மற்ற சமூகத்தில், மற்ற நாடுகளில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கு உள்ள உரிமைகள், இங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு கிடைப்பதில்லை. பெண்களுக்கு எதிரான இந்த நடைமுறைகள், அவர்கள் மரியாதையுடன், நிம்மதியுடனும், பெருமையுடனும் இந்த சமூகத்தில் வாழ முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இந்த விவாகரத்து முறை,
அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என, அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மத்திய அரசு மனுவில் கூறப்பட்டுள்ளது.