Breaking News
பாலியல் தொழிலாளி என குற்றஞ்சாட்டிய நாளிதழிடமிருந்து நஷ்ட ஈடு பெற்ற மெலனியா டிரம்ப்

அமெரிக்காவின் முதல் பெண்மணியின் மாடலிங் வாழ்க்கையைப் பற்றி கட்டுரையில் எழுதியதற்காக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மன உளைச்சலுக்காக ஐக்கிய ராஜ்ஜியத்தின் டெய்லி மெயில் நாளிதழ், கட்டுரையால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் செலவுகளை கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது.

மெலனியா டிரம்ப் முன்பு பாலியல் தொழிலாளியாக பணியாற்றினார் என்று குற்றஞ்சாட்டி அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த செய்தியை பின்னர் திரும்பப் பெற்று கொண்டது.

கடந்தாண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது இந்த கட்டுரை வெளியானது.

லண்டன் உயர் நீதிமன்றத்தில் மெலனியா டிரம்ப் செய்தி நிறுவனம் வழங்கிய சேதங்களையும், மன்னிப்பையும் ஏற்றுக் கொண்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் மெலனியா டிரம்ப் செய்தி காரணமாக தனக்கு ஏற்பட்ட களங்கத்திற்காக சுமார் 150 மில்லியன் டாலர்கள் நஷ்டஈடு கேட்டு வழக்குத்தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.