அம்பேத்கரை பின்பற்றுவோம்: ஐ.நா. துணை பொதுச்செயலாளர் அழைப்பு
சமூக நீதி, சமஉரிமைக்காகப் போராட அம்பேத்கரை பின்பற்று வோம் என்று ஐ.நா. துணை பொதுச்செயலாளர் அமினா முகமது அழைப்பு விடுத்துள்ளார்.
ஐ.நா. சபையில் அம்பேத்கரின் 126-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட இந்த விழா வில் ஐ.நா. துணை பொதுச்செய லாளர் அமினா முகமது பங்கேற் றார். அப்போது அவர் பேசியதாவது:
பெண்கள், சிறுபான்மையின மக்கள், சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்காக அம்பேத்கர் போராடி னார். சமூக நீதி, சமஉரிமைகளைப் பெற அம்பேத்கரை முன்னுதாரண மாகப் பின்பற்றி நாமும் போராட வேண்டும்.
தகவல் தொழில்நுட்பம் அதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதை பயன்படுத்தி பின்தங்கிய மக்கள், பெண்களை முன்னேற்ற வேண்டும்.
இருப்பினும் உலகம் முழுவதும் இன்னமும் 390 கோடி மக்களுக்கு இணையவசதி கிடைக்கவில்லை. குறிப்பாக வளர்ச்சியடையாத நாடுகளில் 85 சதவீதம் பேருக்கு இணையவசதி இல்லை. இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.